
மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸ் இருக்கிறார். அதன் பிறகு துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால்கம்ரா என்பவர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக தற்போது தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குணால் அவரை துரோகி என்று விமர்சித்ததால் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் அவருடைய நிகழ்ச்சி நடந்த ஹோட்டலை சூறையாடினர்.
அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் சிவசேனா கட்சியின் எம்பி.பிரியங்கா சதுர்வேதி குணாலுக்கு ஆதரவு தெரிவித்ததோடு நீங்கள் உறுதியாக இருங்கள் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அரசியல் ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் தற்போது துணை முதல்வரை விமர்சித்தது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுக்கும் நிலையில் அவர் பேசியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Maharashtra ❤️❤️❤️ pic.twitter.com/FYaL8tnT1R
— Kunal Kamra (@kunalkamra88) March 23, 2025