தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரையிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் முன்னணி நடிகை நயன்தாரா.  தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும், கதையின் கதாநாயகியாக மண்ணாங்கட்டி படத்திலும் நடித்து வருகிறார் .இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளரான அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கஜினி படத்தின் வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற காட்சி சூட்டிங்கின் பொழுது நயன்தாரா ஓடிவந்தபோது, கட் என்று முருகதாஸ் என்று சொல்லியிருக்கிறார்.

காரணம் அப்போது நயன்தாரா அணிந்திருந்த சட்டை சற்று ஆபாசமாக இருந்தது. இப்படி என்னால் எடுக்க முடியாது என்று கூறி அவர் வேறு சட்டை போட நயன்தாராவிடம் கூறினார். அந்த நேரத்தில் அவரிடம் வேறு டிரெஸ் மாற்ற சொல்லியுள்ளார். ஆனால் நயன்  கடைசி நேரத்தில் இப்படி சொல்றீங்களே வேற ஷார்ட் நான் எடுத்துட்டு வரல. மாத்திக்க இங்கே கேரவனும் இல்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு பிளாட்பார்ம் கடையில் ஒரு சட்டை வாங்கிக் கொண்டு தர அதை கார் ஒன்றில் பின்னால் சென்று மறைவில் நின்று மாட்டிக் கொண்டு வந்துள்ளார்.  ஷார்ட் மாற்றுவதற்கு  மறைவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டார் நயன்தாரா.