இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் 36 லட்சம் பின் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார்.இந்நிலையில்  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் ஒரு பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் பத்மாவதி (55) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்துக்குள்ளான காரில் இர்ஃபான் இருந்தது அம்பலமாகியுள்ளது. விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் அசாருதீன் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.