
கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர், தனது காரில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணுக்கு தெரிந்ததால் சம்பவத்தன்று ஆவேசமடைந்த அந்த இளம்பெண், கார் நின்ற பகுதிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே கத்த தொடங்கி கணவனிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் தனது மனைவியை தாக்கியதால் அந்த பெண் போலீஸ் நிலையம் சென்று கணவன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.