உத்திரபிரதேசம் மாநிலம் பிரதாப் காட் மாவட்டம் தியாஜலால்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரான கருணேஷ் சிங் (34) கார் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் நின்று கொண்டிருந்தது. இதனை கண்டு சந்தேகமடைந்த ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்த போது காருக்குள் பஞ்சாயத்து தலைவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவரை கடத்தி கொலை செய்தனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.