
மராட்டிய மாநிலத்தின் சத்திரபதி சாம்பாஜி நகரின் சுலிபஞ்சன் மலைப்பகுதியில் கார் ஓட்டி பழகிய ஸ்வேதா என்ற இளம் பெண் காருடன் 300 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஓட்டியக்கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதனை அவரின் நண்பர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பள்ளத்தாக்கில் இருந்த ஸ்வேதாவை அடையாளம் கண்டு மீட்டு வரவே சுமார் ஒரு மணி நேரம் ஆகி உள்ளது. பயங்கர காயங்களுடன் இருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
दोस्त बना रहा था Reels, लड़की ने बैक गियर में दबा दिया कार का एक्सलेटर, खाई में गिरने से मौत#Reels #maharashtra #Sambhajinagar pic.twitter.com/sypehvQEHh
— Anuj Singh (@AnujSinghYuva) June 18, 2024