
பீகார் மாநிலம் எப்சிஐ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெகுசராய் நகரின் ரத்தன் சவுக் பகுதி அருகே கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி அதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை இன்று அதிகாலை நடந்த நிலையில் இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.