இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சோனுசூட். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் வில்லன் ஆகவே நடித்துள்ளார். சமீபத்தில் விஷால் நடிப்பில் ரிலீசான மதகஜராஜா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் அவர் Fateh  என்ற படத்தின் மூலமாக சமீபத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி சோனாலி அவருடைய சகோதரி, குழந்தை ஆகியோர் நாக்பூர் மற்றும் மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளார்கள்.

அப்போது திடீரென்று கார் விபத்தில் சிக்கி உள்ளது. இதில் சோனாலி மற்றும் குழந்தை இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சகோதரிக்கு எந்த காயமும் இல்லையாம். தற்போது சோனு சூட் சென்று மனைவியோடு மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.