
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு லக்கி, சல்மான், ஷாருக், ஷாநவாஸ் ஆகிய இளைஞர்கள் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மீது அவர்களின் கார் மோதியத்தில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் நகைச்சுவை சேனல் நடத்தி வரும் நிலையில் இவர்கள் உயிரிழந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.