
கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது.
இதில் அப்துல் ரஷீத் காற்றில் பறந்து கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.