
விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விளம்பர பலகை திடீரென காற்றில் முறிந்து விழுந்தது.
உடனே அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சுதாரித்துக் கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இது போன்ற பெரிய விளம்பர பலகைகளை உரிய அனுமதி பெற்று பாதுகாப்போடு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.