
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உலக்கை அருவி செல்லும் வழியில் உள்ள பெருந்தலை காடு ஷட்டர் அருகே உள்ள கால்வாயில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர். சென்னையை சேர்ந்த ரியாஸ்கான் என்ற 62 வயது நபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான அருவிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.