காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை மருத்துவமனைகளில் அதிகரிப்பதோடு இறப்பு விகிதம் அதிகரிப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.