தன்னுடைய 17 வயதில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கிய மணிமேகலை 14 வருடங்களாக தொகுப்பாளியாக இருந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே அதிகம் கவரப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த நான்கு சீசன்களிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை  விதவிதமான கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.

மணிமேகலை சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார். எப்போதும்  ஏதாவது செய்து அதனை பதிவிட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் காலில் பலத்த கட்டுடன் இருக்கும் போட்டோவை  பதிவிட்டுள்ளார். அதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் பலத்த அடிபட்டு விட்டதாகவும் எழுந்திருக்க கூட முடியவில்லை என்றும் மனசோர்வுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)