
நீலகிரி மாவட்டத்திலுள்ள கொட்ட கரண்டி பகுதியில் ராஜ்குமார் (60 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று திடீரென அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது ராஜ்குமார் சடலமாக கிடப்பது தெரியவந்ததோடு அழுகிய நிலையில் பிணம் கிடந்தது. அவர் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மர்ம மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது