
நாமக்கல் முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா சரிவடைந்துள்ளது. நேற்று வரை ஒரு முட்டை ரூ. 5.05 என்று மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று விலை குறைந்து 4.80 பைசாக்கு விற்பனையாகிறது. இது பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விற்பனை மற்றும் நுகர்வு குறைந்ததால் தான் முட்டை விலை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில்லரை விலையில் முட்டை 7 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையும் குறைய வாய்ப்புள்ளது