
நைஜீரியாவில் நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஜிவாகா மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. அப்போது லாரியிலிருந்து பெட்ரோல் கீழே கசிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியில் உள்ள குடிசையில் வாழும் மக்கள் கேன்களில் ஓடி வந்து பெட்ரோலை பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரி பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் மக்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் நைஜீரியாவில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.