
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலைகள் சமீப காலமாகவே உயர்ந்து வருகிறது. குறிப்பாக வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தக்காளி விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோவுக்கு 40 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தக்காளி கிலோவுக்கு 50 முதல் 80 ரூபாய் வரையில் விற்பனையான நிலையில் இன்று திடீரென 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.