
தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர திருநாள். இதனால் ஏராளமான மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். இந்த பங்குனி உத்திரத்திருநாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 400 ரூபாய்க்கு விற்பனையான மல்லி தற்போது 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஐஸ் மல்லி 400 ரூபாய்க்கும், முல்லை ஒரு கிலோ 750 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 120 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 750 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதன்பிறகு அரளி பூ ககலோ 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி தோவாளை சந்தையிலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.