
உத்தரப் பிரதேசம், கோரக்பூர் பகுதியில் ஒரே நாளில் வாலிபர் ஒருவர் இரு திருமணங்கள் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது கோரக்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், காலை நேரத்தில் தனது காதலியை நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டு, அதே நாள் மாலை நேரத்தில் குடும்பத்தினர் தேர்வு செய்த பெண்ணை பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான தகவல், காதலி போலீசில் புகார் அளித்ததையடுத்து வெளியாகியுள்ளது.
நவபாரத் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த இளைஞருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அந்த பெண் தன் காதலனால் ஏற்கனவே இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைப்பு செய்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தினர் ஒப்புக்கொள்வார்கள் என்று கூறிய தன் காதலியை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதே நாள் மாலையில் தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தையும் செய்துள்ளார். தற்போது அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.