கால்நடை பராமரிப்பு மற்றும் கோழி பண்ணை துறையால் நிர்வகிக்கப்படும் திட்டமாக மத்திய அரசின் தேசிய கால்நடை மிஷன் திட்டம் உள்ளது. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தி துறையில் தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கோழி பண்ணை வைப்பதற்கு 25 லட்சம், ஆடு பண்ணை 50 லட்சம், பன்றி பண்ணை 30 லட்சம், தீவனத் தொழில் 50 லட்சம் என மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://ahidf.udyamimitra.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.