உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கொத்வாளி அருகே மன்னா புரவா கிராமத்தில் விஜய் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொண்டு தனது வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். அவர் புகாரின் அடிப்படையில் போலீசார் விஜயகுமார் வீட்டிற்கு சென்றனர். அவரிடம் போலீசார் என்ன பொருள் காணாமல் போனது என கேட்டனர். அதற்கு விஜய் வர்மா தன் வீட்டில் இருந்த கால் கிலோ உருளைக்கிழங்கு காணாமல் போனதாக கூறியுள்ளார்.

அதிகமாக வேலை செய்ததன் காரணமாக மது அருந்திவிட்டு உணவு அருந்த நினைத்ததாகவும் சமையலுக்கு வைத்திருந்த உருளைக்கிழங்கை காணவில்லை எனவும் விஜய் வர்மா தெரிவித்தார். தனது உருளைக்கிழங்கு காணாமல் போனதால் அதை கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசாரிடம் கூறியுள்ளார். அவர் பேசியதை கேட்டு போலீசா சிரித்தனர். மேலும் போலீசார் அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.