
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களைச் சேர்ந்த கணேஷ், ஜோஸ்னா, லூயிஸ் ஆகிய மூவர், பெண்களின் நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெரும் மோசடி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால் சென்டர் மூலமாக பெண்களை வலையில் வீழ்த்தி, குந்தக்கல்லில் அமைக்கப்பட்ட ஸ்டுடியோவில் அவர்களுடன் ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட Xampster போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், கிரிப்டோகரன்சி மூலம் இவர்களுக்கு பணம் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சைபர் பாதுகாப்பு மற்றும் கருடா தனிப்படையின் விசாரணையில், கணேஷ் மற்றும் ஜோஸ்னா ₹16 லட்சமும், லூயிஸ் ₹11 லட்சமும் ஆபாச வீடியோக்கள் மூலம் சம்பாதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் டெக்னோயிஸ் லிமிடெட் என்ற சைப்ரஸில் பதிவான நிறுவனத்தின் வழியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆபாச வீடியோக்களுடன் நேரலை (live) நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் எத்தனை பெண்களை சிக்க வைத்து நிர்வாண வீடியோக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த இந்தக் கூட்டணி, சட்டத்தின் கண் விழிக்கையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களிடம் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், மற்ற தொடர்புடையவர்கள் பற்றியும் தகவல் பெற போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.