
வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதுமட்டுமின்றி காவடி எடுத்து போகும் பக்தர்கள் பாதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இதுதவிர தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தற்போது வெயில் அதிகம் என்பதால் பானங்கள் மற்றும் குடி தண்ணீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என முதல்வர் யோகி கூறினார்.