
காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 250 காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியான அறிக்கையில், காவல்துறை – பொதுமக்கள் இடையே “அன்பான அணுகுமுறை” என்ற நிலையை பாதுகாக்க வேண்டும்.
காவல் நிலையங்கள் வரும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் வரவேற்பறை, கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர முதல்வர் ஆணையிட்டுள்ளார்.