சென்னை கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இந்நிலையில், இந்த சிறுவர் பூங்காவை உலகத் தரம் வாய்ந்ததாக உயர்த்தவும், மாற்றியமைப்பதற்காகவும் 6 மாதங்கள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது