
பிரபல சமையல் கலை நிபுணராகவும் டி டால்டன் சென்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருப்பவர் ராபர்ட் ஜான் டி வென். இவர் தற்போது ஒரு ஆடம்பரமான மற்றும் அதிக சுவை நிறைந்த விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம் ஆகும். இதற்கு தி கோல்டன் பாய் என்று அவர் பெயர் வைத்துள்ளார்.
இந்த பர்கரில் வாக்யு மாட்டிறைச்சி, குங்குமப்பூ, தங்க இலைகள் மற்றும் பல சத்தான மற்றும் விலை உயர்ந்த பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகின் ஆடம்பரமான உணவுப் பொருட்களில் இந்த பர்கரும் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்ததாக ராபர்ட் கூறியுள்ளார். இந்த பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram