PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்கான மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. அதில், வீடு, சாலைகள் மற்றும் வேலை உட்பட பல கிராமப்புற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற வீடுகளுக்கான மானியத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறிப்பாக, புதிய வீடு கட்டுபவர்களுக்கான மானியம், 1.20 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக வழங்க திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.