
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல். இவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கே.எல் ராகுல் வெளியிட்ட ஒரு பதிவை பார்த்து அவர் தற்போது ஓய்வு அறிவிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக தகவல் பரவி வருகிறது. அதாவது நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறேன் என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து தான் அவர் ஓய்வு பெற இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்ப தொடங்கி விட்டார்கள்.

அவர் ஓய்வு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் எதார்த்தமாக அப்படி பதிவிட்டது தான் ஓய்வு முடிவு என்று சமூக வலைதளத்தில் வதந்தியாக கிளப்பி விட்டு விட்டார்கள். இது தொடர்பாக பிசிசிஐ சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இதனால் கே எல் ராகுல் ஓய்வு பெறுவதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.