அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீனவர்களின் மீதான தாக்குதலை தடுக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து வருவதோடு வேண்டுமென்றே நம் மீனவர்கள் சென்ற படகின் மீது மோதியுள்ளனர்.

இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை மத்திய மற்றும் மாநில அரசுகளும்    வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு முதலமைச்சரின் பணி முடிவடைந்து விடுகிறது. மேலும் ஆளுநரின் பதவி நீட்டிப்பு குறித்து ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் அது தொடர்பாக முடிவெடுக்க ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கூறினார்.