இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் நடைபெற்ற எஃப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினை கூறினார். அவரை கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று புகழ்ந்ததோடு அவரின் பந்துவீச்சு சமாளிக்க முடியாததாக இருக்கும் என்று கூறினார்.

அவர் ஒரு மிரட்டலான பந்துவீச்சாளர். அவரின் பந்துவீச்சு மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் நான் பேட்டிங் செய்வதற்கு முன்பாக 100 முறை அவரின் பந்துவீச்சு வீடியோவை பார்த்துவிட்டு தான் செல்வேன். நான் அவரை பலமுறை எதிர் கொண்டுள்ளேன். அவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுவார். மேலும் அவருக்கு எதிராக விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.