
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சவுரங் கங்குலி இன்று (ஜூலை 8) தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் கொல்கத்தாவில் ஆடம்பர குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை சண்டிதாஸ் செழிப்பான அச்சு வணிகத்தை நடத்தி வந்தார். எனவே கங்குலி ஆடம்பரமான குழந்தை பருவத்தைக் கொண்டிருந்தார். அதன் பின் கங்குலி கிரிக்கெட் உலகை ஆண்ட நிலையில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.700 கோடி என்று தெரியவந்துள்ளது.