
டெல்லியில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெல்லியில் ரன்ஹோலா கோட்லா பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் விஹார் பிஎச் 2 பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவன் வந்த எடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மைதானத்தில் மின்சார கம்பியை ஏற்றி செல்லும் இரும்பு கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் சிறுவன் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.