
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது கேக் மட்டும்தான். கிறிஸ்துமஸ் மதத்தை பின்பற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கேக் செய்து அல்லது கடையிலிருந்து கேக் வாங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன்படி வீட்டிலேயே எப்படி சாக்லேட் கேக் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கேக் தயாரித்த பின்னர் உங்களுக்கு பிடித்த உலர் பழங்கள், கிரீம்கள் மற்றும் ஜேம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இதனை ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் மாவு
- 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
- சர்க்கரை
- 4 டீஸ்பூன் சாக்லேட் பவுடர்
- உப்பு தேவையான அளவு
- இரண்டு முட்டை
- ஒரு கப் பால்
- 3 டீஸ்பூன் காய்கறி எண்ணெய்
- 2 டீஸ்பூன் வெண்ணிலா சாறு
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, சாக்லேட் பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இவற்றுடன் முட்டை, பால், வெண்ணிலாச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மூன்று நிமிடங்கள் கலக்க வேண்டும்.
கேக் மாவை மெல்லியதாக சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை சேர்க்க வேண்டும். பின்னர் 30 முதல் 48 நிமிடங்களுக்கு ஓவனில் கேட் கலவையை பேனில் வைத்து பேக்கிங் செய்யவும்.
அதன் பிறகு அடுப்பின் வெப்பநிலையை 350f அமைக்கவும். ஒரு டூத் பிக்கை பயன்படுத்தி கேக் நன்றாக வெந்துள்ளதா என்று சோதிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கேக் பேனை ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் சாக்லேட் கேக்கை ருசிக்கலாம்.