உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு சென்ற 18 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள், அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரிவித்துள்ளனர். ஆனால், இறந்த சிறுமிகளின் குடும்பத்தினர், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகித்து தீர விசாரிக்க கோரி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.