மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9-ம் தேவி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. வருகிற செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது‌.

இதன் காரணமாக சிறிய பரிவர்த்தனைகள் கொண்ட வணிக நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மீதான பரிவர்த்தைகளுக்கு வரி விதிக்க ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ரூ‌.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.