உலகம் முழுவதும் தற்போது ஏஐ  தொழில்நுட்பம் ஏஐ அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் பல நன்மைகள் விளைந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று  எடிட் செய்த அது தொடர்பான வீடியோவை அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட நிலையில் அதனை முன்னிட்டு இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டனர். மேலும் அந்த வீடியோவில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணச்சீட்டு உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார். இந்த வீடியோவை அந்த கட்சியினர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.