
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யா 45 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா விலங்குகள் நல ஆர்வலராக இருக்கும் நிலையில் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகிறார். குறிப்பாக இவர் சோரோ என்ற ஒரு வளர்ப்பு நாயை வளர்த்து வந்தார்.
இவர் அவ்வப்போது சோரோவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் உயிரிழந்து விட்டதாக திரிஷா சோகத்துடன் பதிவிட்டுள்ளார். என்னுடைய மகன் கிறிஸ்மஸ் பண்டிகையில் காலையிலேயே இறந்து விட்டான். இனி வாழ்வில் அர்த்தமே இல்லை. மேலும் நான் சில காலங்களில் என்னுடைய பணியில் இருந்து ஓய்வெடுக்க போகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram