திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விலைப் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள கோவிலில் சாமி ஆடுவார். இன்னும் திருமணம் ஆகாத இவர் கடந்த சில வருடங்களாக குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த வரதராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.