பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் ஆர்கே பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி சொரக்காயலம்மா ஊராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு பாலு என்ற மகன் உள்ள நிலையில் இவர் அரசினர் கலை கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கோபி குடிப்பழகத்திற்கு அடிமையானதால் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடகு வைத்து குடித்துள்ளார்.

இதனை அவருடைய மனைவி கண்டித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோபி குடிப்பதற்கு பணம் இல்லாததால் மகன் பாலுவின் செல்போனை எடுத்துச் சென்று ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது மகன் தந்தையை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மாணவன் பாலு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.