
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு பகுதியில் சுப்பிரமணியன் (48)-பேச்சியம்மாள் (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு முத்துமாரி என்ற மகளும் அய்யனார் (20) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் முத்துமாரிக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு அய்யனாருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகறாறு செய்துள்ளார். இவர் அடிக்கடி சுப்பிரமணியனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுள்ளார். இதனால் சுப்பிரமணியனின் தம்பி அய்யனாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் சித்தப்பாவை தாக்கியதோடு வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு மீண்டும் வீட்டிற்கு வந்த அய்யனார் மதுபோதையில் தகறாறு செய்துள்ளார். அவர் வீட்டை விற்று ரூ.5 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் சுப்பிரமணியன் விறகு கட்டையால் அய்யனாரை தாக்க அவரும் தாக்கியுள்ளார். இதை தடுப்பதற்காக பேச்சியம்மாள் உலக்கையால் தன் மகனின் தலையில் அடித்துள்ளார். இதில் அய்யனார் மயங்கி விழுந்தார். அவர் மதுபோதையில் மயங்கி கிடப்பதாக நினைத்து விட்டு பெற்றோர் இருவரும் தூங்குவதற்காக சென்றனர். மறுநாள் காலை பார்த்தபோது அய்யனார் உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் பேச்சியம்மாள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.