
கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் சமாதானம் செய்து புவனேஸ்வரியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகும் ரமேஷ்குமார் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.