கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் மதுபோதையில் வீட்டில் தன்னுடைய தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது அம்சவேணி பணம் கொடுக்காத காரணமாக அவரைச் சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் அம்சவேணி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போதை தெளிந்த பிறகு தன்னுடைய தாயை தாக்கிய வேதனையில் கார்த்திக் விரத்தியில் அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி அவர் உயிரிழந்தார்.