கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். போட்டி தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு உதவும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பை செய்துள்ளது. குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு பத்து மாதங்களுக்கு மாதாந்திர ஊக்க தொகையாக 7500 வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் நிலை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராவதற்காக 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். யுபிஎஸ்சி தேர்வில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் குடிமைப்பணி தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டு தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.