2013ஆம் ஆண்டு போன்று டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இல்லை. ஒரு தேர்தலில் கூட பாஜக வென்றதில்லை. இப்போது தேர்தல் நடந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார் என அவர்களுக்கு தெரியும் என்றார்.