பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு பதிவில்,  தமிழகத்தில் வருடம்தோறும் இரண்டு லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமல்லாமல், அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்து ஆடுகிறது. கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர்.

என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த இந்த தமிழ்நாட்டில் பணி செய்வது அந்த எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத் தூண்டும் அரசு என்று பதிவிட்டுள்ளார்