
குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.