
மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாம்சுதீன் வீட்டிலிருந்து அறிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். உடனே அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் போலீசார் வந்து தன்னிடம் விசாரணை நடத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த ஷாம்சுதீன் வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது கூறுகையில், சாம்சுதினுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த போது அவருக்கும் விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த பாத்திமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை ஷாம்சுதீன் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது மனைவி நடத்தையின் மீது அவருக்கு சந்தேகம் இருந்ததால் மனைவியை கொல்ல முயன்றதாக தெரிகிறது. காயங்களுடன் பாத்திமா சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஷாம்சுதீன் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.