
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் விதமாக அமைந்துள்ளது
இந்நிலையில் ரேஷன் கார்டில் தொடர் மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளது. அதனை சரி செய்யவே மத்திய அரசு சமீபத்தில் ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க உத்தரவிட்டது. ஆனால் பெரும்பானவர்கள் அதை செய்யவில்லை. மக்களுக்கு முறையாக அவர்களுடைய சலுகைகள் சென்றடைவதற்கு தான் இதுபோன்ற முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகளை முடிக்க அரசு மார்ச் 31ஆம் தேதி கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஒருவேளை இந்த கால அவகாசத்திற்குள் ரேஷன் அட்டையோடு ஆதார் இணைத்தல், கைரேகை பதிவேற்றம் செய்தல், கேஒய்சி சரிபார்த்தல் போன்றவற்றை முடிக்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இதனை விரைந்து முடிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.