தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக தகுதியுள்ள குடும்ப பதவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு மாதம் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை 15 ஆம் தேதிக்கு பதில் சற்று முன்கூட்டியே வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிடம் இருந்து எதுவும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக ஆலோசித்து தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அதில் தகுதி உள்ளவர்களுக்கு இந்த மாதம் முதல் உதவி தொகை வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.